News March 26, 2024
கள்ளக்குறிச்சி: மாரியம்மன் கோவில் தேரோட்டம்

திருக்கோவிலூர் அருகே உள்ள வடகரை தாழனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாதத் திருவிழா கடந்த 14 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
Similar News
News August 24, 2025
கள்ளக்குறிச்சி: பட்டா பற்றி புதிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <
News August 24, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

கள்ளக்குறிச்சி மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
குழந்தை தொழிலாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் புகார்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதுகுறித்து தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்