News January 10, 2025
வெற்றினா இதுதான் சார் வெற்றி ❤️❤️

சிவகார்த்திகேயன் பற்றி SV சேகர் கூறிய ஃப்ளாஷ்பேக் புல்லரிக்க வைத்துள்ளது. 2007-இல் தனது மகன் நடித்த படத்திற்காக ஆங்கரிங் செய்ய சிவகார்த்திகேயனை அணுகிய போது, கமலோடு ஒரு செல்ஃபி எடுக்க உதவ முடியுமா என தன்னிடம் அவர் கேட்டதாக SV சேகர் தெரிவித்தார். மேலும், அன்றைக்கு அப்படி கேட்ட சிவகார்த்திகேயனை வைத்து, இன்றைக்கு கமலே படம் தயாரித்திருக்கிறார் என்றால் இதுதான் உண்மையான வெற்றி எனவும் அவர் கூறினார்.
Similar News
News February 6, 2026
இந்தியா, US வர்த்தக டீல்.. இறுதி முடிவு

இந்தியா, US வர்த்தகத்தின் சட்டப்பூர்வ ஒப்பந்தமானது மார்ச் மாதத்தில் கையெழுத்தாகும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுபற்றிய இருநாடுகளின் கூட்டறிக்கை அடுத்த 4-5 நாள்களில் வெளியானவுடன் அதிபர் டிரம்ப் அரசாணை பிறப்பிப்பார் என்ற அவர், தற்போது உள்ள 50% வரி 18% ஆக குறைக்கப்படும் எனக் கூறினார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப ₹45 லட்சம் கோடிக்கு US பொருள்கள் வாங்கப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.
News February 6, 2026
ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பு.. PM மோடி காட்டம்

இந்திய இளைஞர்களின் உரிமைகளை ஊடுருவல்காரர்கள் தட்டிப் பறிப்பதாக PM மோடி கூறியுள்ளார். ஊடுருவல்காரர்களை எதிர்க்கட்சிகள் பாதுகாப்பதாக குற்றஞ்சாட்டிய PM மோடி, அவர்கள் பழங்குடியினரின் நிலங்களை பறித்துவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகளை சரிசெய்வதிலேயே பாஜக அரசுக்கு நேரம் போய்விடுவதாகவும், இதற்கு எதிர்க்கட்சிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் PM மோடி குறிப்பிட்டார்.
News February 6, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 603
▶குறள்:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
▶பொருள்: அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.


