News January 10, 2025
நேரடி கொள்முதல் தொடர்புக்கு தொலைபேசி எண் அறிவிப்பு

நேரடி நெல் கொள்முதல் தொடர்பாக 04142-220700 என்ற எண்ணிற்கு விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News February 15, 2026
கடலூர்: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News February 15, 2026
கடலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.
News February 15, 2026
கடலூர் மாவட்டத்தில் இயல்பை விட 13% மழை அதிகம்!

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இன்று பிப்ரவரி 15 வரை இயல்பாக 32.5 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இன்று வரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் மழை இயல்பை விட 13 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று (பிப்.15) அறிவித்துள்ளது.


