News January 10, 2025
‘டைவர்ஸ்’ கேட்டாலே கதை முடிஞ்சுது..!

சினிமா பார்க்கவும், சிரிக்கவும் கூட வடகொரியாவில் தடை இருப்பதை அறிவோம். இந்நிலையில், தற்போது அங்கு விவகாரத்து கோருவதை தடுக்கும் வகையிலும், அதிபர் கிம் ஜாங் உன் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விவாகரத்து கோரும் தம்பதிகளை 6 மாதங்கள் வரை சிறைக்கு அனுப்பவும், அங்கு கடுமையான வேலைகளை வழங்கியும், உணவு வழங்காமலும் சித்ரவதை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Similar News
News December 9, 2025
புதுச்சேரி: விஜய்க்காக மொட்டை அடித்த இளம்பெண்!

புதுச்சேரியில் இன்று தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் மக்களை சந்திக்க உள்ளார். இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வந்த இளம் பெண் ஒருவர் விஜய்க்காக மொட்டை அடித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசுகையில், “ஆட்சி மாற்றம் ஏற்படனும், கரூர் சம்பவத்திற்கு பின் விஜயின் முதல் மக்கள் சந்திப்பு, எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது. இதற்காகதான் மொட்டைய அடிச்சுக்கிட்டேன், என தெரிவித்தார் அவர்.
News December 9, 2025
FLASH: பங்குச்சந்தைகள் கடும் சரிவு

பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-வது நாளாக கடும் வீழ்ச்சியை கண்டுள்ளன. சென்செக்ஸ் நேற்று 600 புள்ளிகள் சரிந்த நிலையில், இன்றும் 682 புள்ளிகள் சரிந்து 84,682 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி 229 புள்ளிகள் சரிந்து 25,730 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. Shriram Finance, Asian Paints, TCS உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் 5% வரை சரிவைக் கண்டுள்ளன.
News December 9, 2025
வாழ்த்து கூறி கூட்டணியை உறுதி செய்த ஸ்டாலின்

சமீபகாலமாக காங்., தலைவர்கள் அடுத்தடுத்து விஜய், SAC-யை சந்தித்ததால், தவெக கூட்டணியில் காங்., இணையலாம் என பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, கூட்டணி வலுவாக இருப்பதை CM ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவிற்கான கூட்டு முயற்சிகளை சோனியாவின் கொள்கை ரீதியான பாதையும் வழிகாட்டுதலும் தொடர்ந்து வலுப்படுத்தட்டும் என தெரிவித்துள்ளார்.


