News January 10, 2025
IND அணிக்கு 239 ரன்கள் இலக்கு

அயர்லாந்து vs இந்திய மகளிர் அணிகள் மோதும் முதல் ODI போட்டி இன்று நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த IREW அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் கேபி லெவிஸ் 92, லியா பால் 59 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில், ப்ரியா மிஸ்ரா அதிகபட்சமாக 2 விக்கெட்களை கைப்பற்றினார். இந்த ODI தொடரில் மொத்தம் 3 போட்டிகள் நடைபெற உள்ளன.
Similar News
News January 20, 2026
குழந்தைகளுக்கு இதை கொடுக்காதீங்க ப்ளீஸ்..

பிறந்து ஒரு வயதான குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுப்பதில் மிக கவனம் தேவை. பெரியவர்கள் போல் அவர்களுக்கு ஜீரண சக்தி இருக்காது என்பதால் நட்ஸ் வகைகளை தவிர்க்க வேண்டும். பாக்கெட் பால், தேன், கடினமான காய்கறிகள், திராட்சை, கடல் சார்ந்த உணவுகள் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. மிட்டாய்களை கொடுக்கவே கூடாது. கடைகளில் வாங்கும் பிஸ்கட் போன்ற பொருள்களை தவிர்க்க வேண்டும். இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.
News January 20, 2026
‘ஜன நாயகன்’ படக்குழு மீது கோர்ட் அதிருப்தி

‘ஜன நாயகன்’ பட வழக்கு விசாரணையில் அதிரடி கருத்துகளை நீதிபதிகள் கூறியுள்ளனர். சென்சார் போர்டுக்கு போதுமான அவகாசத்தை படக்குழு வழங்காமல் கோர்ட்டை நாடியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு அவசர சூழலை படக்குழுவே உருவாக்கியுள்ளதாகவும் HC அதிருப்தி தெரிவித்துள்ளது. நீதிபதிகளின் இந்த கருத்துக்களால் ‘ஜன நாயகன்’ படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
News January 20, 2026
பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

தொடர்ந்து 2-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள் சரிந்து 82,180 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 353 புள்ளிகள் சரிந்து 25,232.50 புள்ளிகளில் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.


