News January 10, 2025

இணக்கமாக இல்லாத 3 பேரை ஓரங்கட்டிய புஸ்ஸி ஆனந்த்!

image

விஜய் இன்றி TVK பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வரும் ஆனந்த், தன்னிடம் இணக்கமாக இல்லாதவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆரம்பம் முதலே மாவட்ட பொறுப்பாளர்கள் விவகாரத்தில் கவனமாக இருக்கும் அவர், காஞ்சி நெப்போலியன், நாகை சேகர், தூத்துக்குடி அஜிதா ஆகியோரை அழைக்கவில்லை எனத் தெரிகிறது. இந்த விவகாரம் தவெகவில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

Similar News

News December 10, 2025

டிசம்பர் 10: வரலாற்றில் இன்று

image

*மனித உரிமைகள் நாள். *1768 – முதலாவது பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது. *1878 – முன்னாள் CM ராஜாஜி பிறந்தநாள். *1896 – நோபல் பரிசை தோற்றுவித்த ஆல்பிரட் நோபல் உயிரிழந்த நாள். *1901 – முதலாவது நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது. *1964 – நடிகர் ஜெயராம் பிறந்தநாள். *2016 – கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி உயிரிழந்த நாள்.

News December 10, 2025

மெகுல் சோக்சியை நாடு கடத்த கோர்ட் க்ரீன் சிக்னல்

image

PNB வங்கியில் ₹13,000 மோசடி செய்துவிட்டு பெல்ஜியத்திற்கு தப்பி ஓடிய மெகுல் சோக்சிக்கு, அந்நாட்டு SC சம்மட்டி அடி கொடுத்துள்ளது. இந்தியாவிற்கு நாடு கடத்தலாம் என்ற கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த SC, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால், அவரை நாடு கடத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

News December 10, 2025

₹1.5 கோடி ஜாக்பாட்.. ஊரை விட்டே ஓடிய குடும்பம்!

image

பஞ்சாப்பில் கூலி வேலை செய்யும் நசீப் கவுருக்கு லாட்டரியில் ₹1.5 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில், சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றார். ஆனால் அது கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. செய்தி ஊர் முழுக்க பரவ கொள்ளைக்காரர்கள், ரவுடிகள் பணத்தை பறித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், குடும்பத்துடன் ஊரையே காலி செய்து சென்றுவிட்டார். போலீசார் பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதம் அளிக்கவே, நிம்மதியடைந்துள்ளார்.

error: Content is protected !!