News January 10, 2025

சிறுமியின் குடும்பத்திற்கு ₹5 லட்சம் வழங்க ஆணை

image

விக்கிரவாண்டியில், கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், முதல்வர் ₹5 லட்சம் வழங்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கில் சிறையில் உள்ள பள்ளி தாளாளர், முதல்வர், வகுப்பாசிரியர் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறுமி லியா லட்சுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ₹3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 8, 2025

காஞ்சிபுரம் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்கள் தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம் இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள்<> Rail Madad<<>> மொபைல் செயலியில் PNR-யை உள்ளிட்டு, காணாமல் போன பொருட்களின் விவரங்களை பதிவு செய்யலாம். ஆப் பயன்படுத்த விரும்பாத பயணிகள் railmadad.indianrailways.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். SHARE

News December 8, 2025

நீதி வென்றதாக நடிகர் திலீப் கண்ணீர்

image

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளதாக <<18502283>>வழக்கில் இருந்து விடுதலை<<>> செய்யப்பட்ட நடிகர் திலீப் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். எர்ணாகுளத்தில் பேசிய அவர், பொய்யான வழக்கால் சினிமாவில் தனது புகழ், நற்பெயரை சீர்குலைக்க நினைத்தவர்களின் எண்ணம் பொய்யாகிவிட்டது என்றார். மேலும், இந்த வழக்கிற்காக கடந்த 9 ஆண்டுகளாக தனக்கு துணை நின்ற சினிமா, சட்ட நிபுணர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

News December 8, 2025

பள்ளி மாணவி மயங்கி விழுந்து மரணம்

image

தென்காசி, உடையாம்புளி பகுதியில் பள்ளிக்கு புறப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி பாலகிருஷ்ணவேணி (13) மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிறக்கும்போது இதயத்தில் பிரச்னை இருந்துள்ளது. அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில், இன்று காலை அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆசை ஆசையாக கிளம்பிய அவர், அப்படியே மயங்கி கீழே விழுந்த உடன் உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!