News January 10, 2025

திண்டுக்கல்: அரசு பஸ் மோதி மாணவன் உயிரிழப்பு

image

வேடசந்தூர் அருகே நேற்று இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிற்பயிற்சி நிலைய மாணவா் உயிரிழந்தாா். வேடசந்தூா் நாகம்பட்டி பகுதியில் சென்றபோது, போடியிலிருந்து சேலத்துக்குச் சென்ற அரசுப் பேருந்து இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கோகுலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தருண், எட்வின் சகாயராஜ் ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Similar News

News January 29, 2026

திண்டுக்கல் அருகே விபத்து: 5 பேர் காயம்

image

திருப்பூரிலிருந்து- வத்திராயிருப்பு நோக்கிச் வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பைக் ஒன்று குறுக்கே வர, அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

News January 29, 2026

உச்சகட்ட பாதுகாப்பில் பழனி!

image

பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தென்மண்டல ஐஜி விஜயேந்திர பீதாரி தெரிவித்தார். குழந்தைகள் காணாமல் போனால் QR code மூலம் அடையாளம் கண்டு மீட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழனி அடிவார பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டால் தனி குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News January 28, 2026

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை 28.01.2026 இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நடைபெற்ற ரோந்து பணிகள் விவரங்களை வெளியிட்டுள்ளது. தலைமை அலுவலகம், டிஎஸ்பி மற்றும் நகர/தாலுகா காவல் நிலையங்களில் காத்திருக்கும் அதிகாரிகள், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கோடைக்காலம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் சேர்ந்தார். தொடர்பு எண்கள் மற்றும் பொறுப்பாளர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!