News January 10, 2025
ரயிலில் தட்கல் டிக்கெட் ஈஸியாக புக் செய்வது எப்படி?

ரயிலில் சில நிமிடங்களில் விற்றுத் தீரும் தட்கல் டிக்கெட்டுகளை ஈஸியாக புக் பண்ண இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. *அதிவேக Internet உள்ள பகுதியில் இருங்கள். *ACக்கு காலை 9.58க்குள்ளும், Sleeperக்கு 10.58க்குள்ளும் IRCTCயை லாகின் செய்து உள்ளே சென்றுவிடுங்க. *Captcha Codeஐ கவனமாக Enter செய்யுங்க.*கிரெடிட் கார்டை வைத்து புக் செய்வதை விட, IRCTC ewallet (அ) UPI மூலம் விரைவாக புக் செய்யலாம். Happy Pongal..
Similar News
News January 20, 2026
லைட் போட்டுக் கொண்டு தூங்கலாமா?

இரவில் லைட் போட்டுக் கொண்டு தூங்குபவர்களுக்கு இதய நோய் பாதிக்கும் ஆபத்து அதிகரிப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. 89,000 பேரின் இதய செயல்பாடு தொடர்ந்து ஆராயப்பட்டதில், வெளிச்சத்தில் உறங்குபவர்களுக்கு, இருளில் உறங்குபவர்களைவிட ஹார்ட் அட்டாக் ஆபத்து 47%, இதய செயலிழப்பு ஆபத்து 56% அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உடல் செயல்பாடு சீராக இருக்க, இரவில் வெளிச்சமில்லாத சூழலில் உறங்குவது நல்லது.
News January 20, 2026
பிக்பாஸ் திவ்யாவை பாதித்த அந்த விஷயம்

பிக்பாஸ் வெற்றியையடுத்து, தனது திருமணம் பற்றி திவ்யா கணேசன் பகிர்ந்த தகவல் SM-ல் வைரலாகிறது. தன்னுடைய Ex-காதலன் பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் என்றும், 2018-ல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில், திடீரென திருமணம் நின்றதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், இதனால் பிறரை நம்புவதற்கே பயமாக இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
டைனோசர்களுக்கும் மூத்த நதி எது தெரியுமா?

பூமியின் பழமையான நதி எது தெரியுமா? ஆஸ்திரேலியாவின் பாலைவன பகுதியில் பாயும் Finke நதி! 30 முதல் 40 கோடி ஆண்டுகள், அதாவது டைனோசர்கள் பிறப்பதற்கு முன்பே ஓட தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மழைக்காலத்தில் மட்டும் ஆறாக ஓடும்; மற்ற நேரத்தில் குட்டைகளாக காட்சியளிக்கும். மலைகள் உருவாவதற்கு முன்பே இந்த நதி ஓடிக்கொண்டிருந்ததால், மெக்டோனல் மலைத்தொடரை நேர்க்கோட்டில் கிழித்துக் கொண்டு பாய்கிறது.


