News January 10, 2025

கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

image

கவர்னர் RN.ரவியை நீக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜெய்சுகின் என்பவர் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார். கவர்னரின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிராக உள்ளதால் அவரை நீக்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கவர்னர் – TN அரசு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில், சட்டப்பேரவையில் அரசின் உரையை வாசிக்காமல் கவர்னர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 9, 2025

தேஜஸ் ரயில் கந்தன் எக்ஸ்பிரஸாக மாற்றமா?

image

சென்னை – மதுரை இடையேயான தேஜஸ் ரயில் வரும் 14-ம் தேதி முதல் ‘கந்தன் எக்ஸ்பிரஸ்’ என பெயர் மாறுவதாக பதிவிட்ட வானதி சீனிவாசன் சற்றுநேரத்தில் அந்த பதிவை டெலிட் செய்தார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக TN அரசு, பாஜக – இந்து முன்னணி இடையே நடக்கும் மோதலானது தற்போது சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளது. இந்நிலையில், வானதியின் இந்த பதிவு அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

News December 9, 2025

காதல் வலைவிரிக்கும் கயாது லோஹர் கிளிக்ஸ்

image

இதழோர ஈரம் குளிர்வித்தாலும், இலைமறை காயாய் படும் அவளது பார்வையோ இனம்புரியாத இதமான வெப்பத்தை அளிக்கிறது. காதோரம் சிறியதாய் மின்னும் வளைய காதணி வண்ணத்துப்பூச்சியாய் சுற்ற, சிரிப்பில் உதிர்ந்த முத்துக்களை சங்கு கழுத்து சரியாக பற்றுகிறது. மேனி ஒளிர, கண்கள் காதல் சொல்ல சற்றே கவர்ச்சியுடன் நிற்கிறார் கயாது லோஹர். இந்த கவிக்கு சொந்தக்காரியின் போட்டோஸை மேலே swipe செய்து பாருங்கள். பிடிச்சா லைக் போடுங்க.

News December 9, 2025

இந்த கீரையில் இவ்வளவு நன்மைகளா?

image

பொதுவாக கீரை என்றாலே ஆரோக்கியமான உணவு தான். மண்ணின் பொக்கிஷம் எனப்படும் பருப்பு கீரையில் ஏராளமான நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *ஒமேகா-3 அதிகம் உள்ளதால்
இதயத்திற்கு நல்லது *கெட்ட கொழுப்பை குறைப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது *இதயத்தை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது *மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது *கண், சருமத்திற்கு நல்லது *மலச்சிக்கல் குணமாகும் *குடல் நோய்களை தடுக்கிறது.

error: Content is protected !!