News March 26, 2024

படகில் சென்று வாக்காளர் விழிப்புணர்வு

image

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் பெரியதாழையில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் படகில் சென்று நடுக்கடலில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் படகில் மகளிர் சுய உதவி குழுவினர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கும் பதாகைகளை பிடித்தபடி கோஷங்களை முழங்கினர்.

Similar News

News April 4, 2025

இந்த ஆலயத்தின் அன்னாபிஷேகம் சாப்பிட்டால் மகப்பேறு!

image

கோவில்பட்டி சொர்ணமலையில் அமைந்தது சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில். மற்ற முருகன் ஆலயங்களை போல் இல்லாமல் இந்த ஆலயத்தில் மூலவராக வேல் வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்த ஆலயத்தில் கிருத்திகை நட்சத்திர நாளன்று மூலவரான வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த அண்ணா அபிஷேகத்தை க்கு ஏங்குபவர்கள் சாப்பிட்டால் ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை

News April 4, 2025

மூன்று அணிகளாக த.வெ.க வினர் ஆர்ப்பாட்டம்

image

வக்பு வாரிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தூத்துக்குடியில் த.வெ.க பொறுப்பாளர் அஜிதா தலைமையில் முதலில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின் அதே இடத்தில தவெக பிரமுகர் எஸ்.டி.ஆர் சாமுவேல் ராஜ் அணியினரும், அதனையடுத்து முருகன் அணியினர் என மூன்று அணியினர் இன்று தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News April 4, 2025

செண்பகவல்லியம்மன் கோவில் நாளை கொடியேற்றம்

image

கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளை (ஏப்.5) காலை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெறுகிறது. அதன் பின் 7 மணியிலிருந்து 8 மணிக்குள் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!