News January 10, 2025

ஈரோடு கிழக்கில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

image

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்.5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

ஈரோடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை ஆக,14 கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. தாளவாடி ஒன்றியம்-சமுதாயகூடம்-சிம்டஹல்லி, சத்தியமங்கலம் ஒன்றியம்-காமாட்சி அம்மன் கோவில் மண்டபம்-அரசூர், மொடக்குறிச்சி ஒன்றியம்-கொங்கு மஹால்-முகாசி அனுமன்பள்ளி, சென்னிமலை ஒன்றியம்-தேவி மஹால்-பாலாஜி கார்டன், பவானி ஒன்றியம்-சிவகாமி மஹால்-சூரியம்பாளையம்.

News August 13, 2025

ஈரோட்டில் பதிவு செய்தால்: நஷ்டம் இல்லை APPLY NOW !

image

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு காரீப் – 2025 பருவத்தின் பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது. அதற்கு ஹெக்டருக்கு ரூ.300 முதல் பிரீமியத் தொகை செலுத்தி ரூ.30,000 வரை பயிர் இழப்பீடு பெறலாம். மேலும் செப்.16 க்குள் அரசு பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பதிவு செய்து கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அறிவித்தார்.

News August 13, 2025

திருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

image

அந்தியூர் குருநாதசாமி ஆடித் தேர் திருவிழா இன்று தொடங்கியது. திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டார். தொடர்ந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். குதிரை சந்தையும் பார்வையிட்டார். அவருக்கு அஇஅதிமுகவின் நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!