News January 10, 2025
திண்டுக்கல் மாணவர்கள் தேசிய தடகள போட்டிக்கு தேர்வு

சென்னை திருத்தணியில் பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டி நடந்தது. 14 வயது பிரிவில் அச்யுதா பப்ளிக் பள்ளி 9ம் வகுப்பு மாணவன் சர்வேஷ் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் நடக்கவுள்ள தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த சவுத் சூன் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் அச்யுதா பப்ளிக் பள்ளி 10ம் வகுப்பு மாணவி கீர்திகா ராஜன் 2ம் இடம் பெற்றார்.
Similar News
News January 30, 2026
ஆத்தூர்: ரூ.10 லட்சம் வழங்கிய அமைச்சர்

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வனப்பகுதி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக காட்டுமாடு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி, முருகனின் மனைவி ராக்கம்மாளிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
News January 30, 2026
திண்டுக்கல்: இனி What’s App மூலம் ஆதார் அட்டை

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News January 30, 2026
பழனி போறீங்களா?

பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்கள் எளிதாக வழி கண்டறிய, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் புதிய QR கோடு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் செல்போன் மூலம் இந்த QR கோடை ஸ்கேன் செய்தால், அவர்கள் செல்ல வேண்டிய பாதைகள், குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கான வழிகாட்டி வரைபடம் (Map) உடனடியாகத் திரையில் தோன்றும். (ஷேர் பண்ணுங்க)


