News March 26, 2024
திமுக செயல்வீரர்கள் கூட்டம்; ஆய்வு செய்த மாவட்ட பொருளாளர்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற இருக்கும் திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.கூட்டத்திற்கான அரங்க அமைப்புகளை கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் நேற்று இரவு ஆய்வு செய்தார்.உடன் பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன்,புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் மனோகரன்,பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
Similar News
News November 5, 2025
கடலூர்: விபத்து ஏற்படுத்திய போலீசார் கைது

ஆவினங்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக ராஜேந்திரன் என்பவரும், அதே காவல் நிலையத்தில் காவலர் இமாம் உசேன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இவர் நேற்று மது போதையில் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில், 2 பேர் உயிரிழந்து, 2பேர் காயமடைந்தனர். இந்நிலையில், முதுநகர் காவல் துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 5, 2025
கடலூர்: எஸ்.பி அலுவலகத்தில் பெட்டிஷன் மேளா

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில், இன்று(நவ.5) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
News November 5, 2025
கடலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

கடலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


