News January 10, 2025
முதுநிலை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுவை பல்கலைக்கழகத்தில் 2025–26 ம் கல்வியாண்டு முதுநிலை பட்டம், பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கியூட் (பி.ஜி) நுழைவு தேர்வுக்கு https://exams.nta.ac.in/CUET–PG/ என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் https://www.pondiuni.edu.in/admissions-2025—-26/ என்னும் பல்கலைக்கழக வலைத்தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் டவுண்லோடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News December 26, 2025
புதுவை: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது லாரி மோதல்

காரைக்கால் தலத்தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உத்திராபதி (65). இவர் சம்பவத்தன்று அண்ணா கல்லூரி எதிரே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் ரவி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
News December 26, 2025
புதுவை: சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் தப்பி ஓட்டம்

அரியாங்குப்பம் பகுதியில் சிறுவர் சீர்திருத்தம் பள்ளி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 3 பேர் பள்ளியின் பின்புறம் உள்ள சுவர் வழியாக எகிறி குதித்து தப்பி ஓடியுள்ளனர். விசாரணையில் தப்பியோடியவர்களில் ஒருவர் காரைக்காலைச் சேர்ந்தவர், 2 பேர் புதுவையைச் சேர்ந்தவர்கள். மேலும் இதுகுறித்த புகாரின் படி, போலீசார் நேற்று வழக்குப் பதிந்துள்ளனர்.
News December 26, 2025
புதுச்சேரி: தேர்தல் அதிகாரியின் முக்கிய அறிவிப்பு

“புதுச்சேரியில் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளா் பட்டியலில் தங்களுடைய பெயா்களைச் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் மற்றும் ஜன.3 மற்றும் ஜன.4 ஆகிய தேதிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும்.” என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.


