News January 10, 2025
ஓவிய பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு

நாகையில் உள்ள பொன்னி சித்திர கடல் ஓவிய பயிற்சி கூடத்தில் 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக ஓவிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான நுழைவு தேர்வு பிப்ரவரி 1 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 30ஆம் தேதிக்குள் 9003757531 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 19, 2025
நாகையில் இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று(ஆக.19) நடைபெற உள்ளது. இம்முகமானது அகரகடம்பனூர், எரவாஞ்சேரி மற்றும் திருக்கண்ணங்குடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக அகரகடம்பனூர் கிறிஸ்துராஜா தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
நாகை: அனைத்தும் அருளும் நவநீதேஸ்வரர்

நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவநீதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நவநீதேஸ்வரரை வழிபட்டால், பணம் கஸ்டம், குடுமப சிக்கல், திருமண தடங்கல், தீராத நோய் என வாழ்வில் உள்ள சகல கஸ்டங்களும் நீங்கி, நினைத்து கைக்கூடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News August 18, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய ஆட்சியர்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, மாவட்ட ஆசிரியர் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணன், தனி துணை ஆட்சியர் பரிமளாதேவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.