News January 10, 2025

மாசில்லா போகிப் பண்டிகை கொண்டாட அறிவுறுத்தல்

image

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மாசு இல்லாத வகையிலும், புகை இல்லாத வகையிலும் போகிப் பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளார். எனவே, போகிப் பண்டிகையன்று டயர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட நச்சுப் பொருள்களை எரிக்காமல், மாசுஇல்லாத வகையில் குப்பைகளை அகற்றி பொதுமக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News February 9, 2026

அரியலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News February 9, 2026

வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மடிக்கணினி

image

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் பணிபுரியும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு, மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.9) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டு வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு திட்டப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக மடிகணினிகளை வழங்கினார். இதில் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News February 9, 2026

அரியலூரில் மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கிய ஆட்சியர்!

image

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.9) நடைபெற்றது. இதில் ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டு மாற்று திறனாளிக்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியினை வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கலந்து கொண்டார்.

error: Content is protected !!