News January 10, 2025

பலூன் திருவிழா தொடங்கியது

image

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே உள்ள திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா இன்று (ஜன.10) தொடங்கியது. 12ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவில், பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், இங்கிலாந்து, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து குழந்தைகளை கவரும் வகையில் சிறுத்தை, ஓநாய், யானைகள், உருவம் கொண்ட பலூன்களும் வெப்ப காற்று பலூன்களும் பறக்க விடப்படுகின்றன.

Similar News

News January 30, 2026

செங்கை: உங்கள் What’s app பாதுகாப்பா இருக்கா? Click Now!

image

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.

News January 30, 2026

செங்கல்பட்டு மாணவர்கள் சாதனை

image

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய ஏர்கன் துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று சாதனை படைத்தனர். செங்கல்பட்டு மாவட்ட ஏர்கன் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் பி.கிருஷ்ணகுமார் தலைமையில் கலந்து கொண்ட வீரர்களில் 12 பேர் தங்கமும், 4 பேர் வெள்ளியும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.

News January 30, 2026

செங்கை: காதல் வலையில் வீழ்த்திச் சீரழிப்பு

image

திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் (20), கேரள மாநில மாணவியைக் காதலித்து நன்மங்கலத்தில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆகாஷ் தன்னைத் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அத்துமீறியதாகவும், தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் மாணவி புகார் அளித்தார். தலைமறைவாக இருந்த ஆகாஷைக் கன்னியாகுமரியில் வைத்துப் பிடித்த தாம்பரம் மகளிர் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!