News January 10, 2025
கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னையில், பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்வோரின் வசதிக்காக இன்று முதல் (ஜன. 10) வரும் 13ஆம் தேதி வரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News February 12, 2026
சென்னை: மனைவியை ஓட ஓட கத்தியால் குத்திய கணவன்!

செம்மஞ்சேரியை சேர்ந்த சதீஷ். மனைவி தேவி (27). தேவியின் நடத்தையில் சதீஷ் சந்தேகம் அடைந்ததால் தேவி அவரது சகோதரி வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம், பேருந்து நிறுத்தம் நோக்கி தேவி நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த சதீஷ். மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட ஓட தேவியை குத்தினார். புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார் சதீஷை நேற்று கைது செய்தனர்.
News February 12, 2026
சென்னை: பட்டப்பகலில் துணிச்சல்; அடித்து உதைத்த மக்கள்!

சென்னை கிண்டி மெட்ரோ ரயில் அருகில் உள்ள பழக்கடையில், தோழியுடன் ஜூஸ் குடித்த பெண்களிடம் இருவர் பட்டப்பகலில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான தளபதி (34) என்பவரை பிடித்து தர்ம அடி கொடுத்து அக்கம் பக்கத்தினர் கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் தப்பி ஓடிய உதயகுமார்(39), என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 12, 2026
சென்னையில் சீமான் கைது!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (பிப்.11) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆதரவு கூறினார். அப்போது ஊரக உள்ளாட்சி பணியாளர்களை காவலர்கள் கைது செய்தனர். அவர்களுடன் சீமானும் கைது செய்யப்பட்டார்.


