News January 10, 2025

பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கிவிட்டீர்களா?

image

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரேஷன் கடைகள் இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இதை விரைந்து பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News February 1, 2026

மத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு பயன்: EPS

image

மத்திய பட்ஜெட் வருங்கால பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என EPS வரவேற்பு தெரிவித்துள்ளார். பொருளாதார உற்பத்தி மதிப்பில் கடன் அளவை குறைக்க அரசு எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கவை எனக்கூறிய அவர், ஜவுளி மேம்பாட்டு திட்டம், திருப்பூர், கரூருக்கு பயனளிக்கும் என்றும், சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு ₹10,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதன் மூலம் TN அதிகளவில் பயன்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

News February 1, 2026

BSNL-ல் ₹78,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

நாடு முழுவதும் 120 மூத்த நிர்வாக பயிற்சியாளர்(Senior Executive Trainee) பணிக்கான அறிவிப்பை BSNL வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு வரும் 5-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை <>www.bsnl.co.in<<>> இணையதளம் வாயிலாக BE/B.Tech Electronics & Telecommunication படித்த 21 – 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அடிப்படை சம்பளமாக ₹78,000 கிடைக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT.

News February 1, 2026

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. PM வாழ்த்து!

image

இன்று தமிழர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் தைப்பூசத் திருநாளுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பதிவிட்டுள்ள அவர், இந்த புனிதமான தைப்பூசத்தில் அனைவருக்கும் வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நம் மீது இருக்கட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் செழிப்பு கிடைக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!