News January 10, 2025
ஜியோ அதிரடி.. வந்தாச்சு 5.5G..!

ஜியோ நிறுவனம் OnePlus நிறுவனத்துடன் இணைந்து அதிவேக 5.5G சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், 5ஜியைக் காட்டிலும் 380% அதிவேக இண்டர்நெட் சேவையை கஸ்டமர்கள் பெறலாம். 5ஜி சாதனங்கள் ஒரு நேரத்தில் ஒரு டவரில் மட்டும் கனெக்ட்டாகும் நிலையில், இந்த புதிய 5.5ஜி ஒரே நேரத்தில் பல டவர்களில் கனெக்ட்டாகும். தற்போது OnePlus 13 மற்றும் OnePlus 13R ஆகிய போன்களில் மட்டுமே 5.5ஜி சப்போர்ட்டாகும்.
Similar News
News December 9, 2025
இண்டிகோ பிரச்னை எப்போது தீரும்? அமைச்சர் விளக்கம்

இண்டிகோ பிரச்னை சீராகி வருவதாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், விமானங்களின் ரத்து, தாமதம் கணிசமாக குறைந்துள்ளதாகவும், விரைவில் நிலைமை முழுவதும் சீராகும் என்றும் குறிப்பிட்டார். விசாரணைக்கு பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், ரீபண்ட், பேகேஜ்களை வழங்குவது, பயணிகள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
News December 9, 2025
விஜய் குறிப்பிட்ட ‘வகையறா’ என்றால் என்ன?

தமிழகத்தையும், புதுச்சேரியையும் பிரித்து பார்க்கும் ‘வகையறா’ நாம் அல்ல என விஜய் இன்று பரப்புரையில் பேசியிருந்தார். இந்த வகையறா என்ற சொல், பெருமளவில் தென்மாவட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம், ஒரு வம்சம், குலதெய்வ வழிபாடு முதலியவற்றின் அடிப்படையில் வகையறா என்ற பெயர் வழங்கப்படுகிறது. மேலும் அகராதியின்படி, வகையறா என்றால் முதலியன, தொடர்புடையவர்கள் என்றும் பொருள்படும்.
News December 9, 2025
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிய விஜய்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். மத்திய அரசுக்கு இருப்பதுபோல் தமிழகம் தனி மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்ற வேறுபாடு தனக்கு கிடையாது என விஜய் கூறியுள்ளார். மக்கள் சந்திப்பில் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக தீர்மானம் அனுப்பியும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என அவர் விமர்சித்தார்.


