News January 9, 2025
திருப்பதி பலி விவகாரம்: தூத்துக்குடி எம்பி இரங்கல்

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “திருப்பதியில் நேற்று கூட்டநெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது; அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 40க்கும் மேற்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 28, 2026
தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தூத்துக்குடி மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை உயர்வு!

நிலக்கடலை விலை உயர்வைத் தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் மிட்டாய் விலையை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவரை கிலோ ரூ.200 முதல் ரூ.260 வரை விற்பனையான நிலையில், இப்போது ரூ.260-க்கு விற்கப்படுகிறது. இன்று முதல் புதிய விலை அமலுக்கு வந்தது. விலை உயர்வால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்க
News January 28, 2026
கோவில்பட்டி உயரும் கடலை மிட்டாய் விலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புவிசார் குறியீடு பெற்ற கடலை மிட்டாய் தயாரிப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில் கடலை பருப்புகள் விளைச்சல் குறைந்ததாலும், விலை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்ந்ததால் உற்பத்தியாளர்கள் கடலை மிட்டாய் விலையை 40% வரை உயர்த்துவதாக கோவில்பட்டியில் இன்று (ஜன.28) நடைபெற்ற சங்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.


