News January 9, 2025
இரவில் நன்றாக தூங்க….சூப்பர் ‘6’ டிப்ஸ்

உடல் ஆரோக்கியத்தை பேண இரவு தூக்கம் முக்கியமானது. நன்றாக தூங்க சில டிப்ஸ் ➛உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்யுங்கள் ➛வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள் ➛பகல் தூக்கத்தை தவிர்க்கவும் ➛படுக்கை என்பது தூங்குவதற்கான இடம், அதனால் படுக்கையில் படிப்பதோ, டிவி பார்ப்பதையும் தவிர்க்கவும் ➛படுக்கையறையை இருட்டாக, அமைதியாக வைத்து கொள்ளவும் ➛தூங்குவதற்கு முன் மது, டீ, காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும்.
Similar News
News January 16, 2026
சற்றுமுன்: புதிய கட்சிகள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NDA கூட்டணியில் பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டு விரைவில் உடன்படிக்கை கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜன.23-ல் PM மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி பங்கீடுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தனியார் தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார். மேலும், புதிய கட்சிகள் வந்தால் வரவேற்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
உடனடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துக: EPS

கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகளை மறுத்து, அவர்களை கைது செய்த திமுக அரசுக்கு EPS கண்டனம் தெரிவித்துள்ளார். கூலி உயர்வு, மின் கட்டண சலுகை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய கறிக்கோழி வளர்ப்பு பண்ணை விவசாயிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களையும், கறிக்கோழி நிறுவனங்களையும் அழைத்து உடனடி முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News January 16, 2026
ஒரு நிமிடத்தில் இவ்வளவு நடக்குதா?

உலகம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. வெறும் 60 விநாடிகளில் ஏராளமான புதிய உயிர்கள் பிறக்கின்றன, தேனீக்கள் டன் கணக்கில் தேனை உருவாக்குகின்றன. அதே நேரத்தில், மனிதர்கள் கைப்பேசி திரையில் மூழ்கி, காடுகளை அழித்து, கழிவுகளை குவிக்கின்றனர். நேரத்தின் மதிப்பு எவ்வளவு பொன்னானது என்பதை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


