News January 9, 2025
சீமான் மீது வழக்கு பாய்ந்தது

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காம இச்சையை தாய், மகளுடன் தீர்த்துக் கொள்ளலாம் என பெரியார் கூறியதாக சீமான் பேசியது பெரும் சர்ச்சையானது. இதற்கு கடும் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் திராவிட கழகத்தினர், வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில், அவர் மீது தற்போது வழக்கு பாய்ந்துள்ளது.
Similar News
News December 8, 2025
விஜய் பரப்புரைக்கு TN-ல் இருந்து யாரும் வராதீங்க: TVK

புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ள விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு TN-ல் இருந்து யாரும் வர வேண்டாம் என புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். உப்பளத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளன. இதனால், கடலூர், விழுப்புரத்திலிருந்து கூட்டம் வரும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News December 8, 2025
இரவில் பெண்கள் கூகுளில் அதிகம் பார்ப்பது இதுதான்

இன்றைய சூழலில், நாம் எந்த கேள்விக்கும் பதில் தேடி, முதலில் ஓடுவது கூகுளிடம் தான். முக்கியமாக, இரவு தூங்கும் முன் ஸ்மார்ட்போனில் எதையாவது தேடிப் பார்க்கும் பழக்கம் பெரும்பாலானோரிடம் அதிகரித்துள்ளது. வேலைப்பளு, வீட்டு வேலைகள் என நாள் முழுவதும் பரபரப்பாக இருக்கும் பெண்கள், இரவில் தூங்குவதற்கு முன் அதிகம் தேடும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா? எதிர்பாராத சுவாரஸ்யமான பதில்களை மேலே SWIPE பண்ணி பாருங்க.
News December 8, 2025
OPS உடன் டெல்லி போட்ட டீல் ஓகே ஆனதா?

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த OPS, கையோடு ஒரு டீல் பேசிவந்ததாக தகவல் கசிந்துள்ளது. OPS-ஐ தங்களது அணியில் சேர்க்க விரும்பும் டெல்லி பாஜக, NDA கூட்டணிக்கு வந்தால் அவர் தொடங்கும் புதிய கட்சிக்கு 5 சீட்களை ஒதுக்குகிறோம் என டீல் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த ஆலோசனையில் OPS இறங்கியிருக்கிறாராம். எனவே, டிச.15 இதுபற்றி Official தகவல் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.


