News January 9, 2025
₹2000000000000 இலக்கு நிர்ணயித்த யோகி

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கும்பமேளா, உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் வரும் 13-ம் தேதி தொடங்கவுள்ளது. இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. யோகிகளும், பக்தர்களும் உ.பி.யில் இப்போது முதலே குவிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கும்பமேளாவுக்கு 40 கோடி பேர் வரவுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.2 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் எனவும் யோகி ஆதித்யநாத் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
கரண்ட் பில்லை அதிகரிக்குமா பிரிட்ஜ் Magnet பொம்மைகள்?

பல டிசைன்களில், பல கலர்களில் பிரிட்ஜ்களில் Magnet பொம்மைகளை ஒட்டிவைப்பது பலரது வீட்டில் உள்ள பழக்கமாகும். ஆனால், இதனால் கரண்ட் பில் அதிகரிக்குமோ என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. உண்மையில் இந்த Magnet பொம்மைகளால் கரண்ட் பில் ஏறாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த Magnet-களில் காந்தப்புலம் மிகவும் பலவீனமாக இருக்கும் என்பதால், இது பிரிட்ஜின் குளிரூட்டும் அமைப்பையோ, மோட்டாரையோ பாதிக்காது. SHARE IT.
News December 7, 2025
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை போக்கு அதிகரிப்பு: EPS

குமரி, தென்காசி, நாகர்கோவில், சேலம், மயிலாடுதுறை பகுதிகளில் நேற்று நடைபெற்ற கொலை, வழிப்பறி சம்பவங்கள், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு போய் உள்ளதை காட்டுவதாக EPS விமர்சித்துள்ளார். ஆனால், CM ஸ்டாலின் சுய விளம்பரத்தில் திளைப்பதாகவும் சாடியுள்ளார். எனவே, ஆட்சியில் இருக்கவுள்ள 4 மாதங்களிலாவது சட்ட ஒழுங்கின் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் EPS வலியுறுத்தியுள்ளார்.
News December 7, 2025
வசூல் வேட்டையில் மம்முட்டியின் ‘களம்காவல்’

ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி, விநாயகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘களம்காவல்’ திரைப்படம் டிச.5-ம் தேதி வெளியானது. மம்முட்டி மீண்டும் வில்லனாக நடித்துள்ள இந்த படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இணைந்து தயாரித்துள்ள இந்த படம், முதல் நாளிலேயே ₹15.7 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


