News January 9, 2025
மேலும் ஒரு நாதக மாவட்டத் தலைவர் விலகல்

நாம் தமிழர் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்து அ.மகாதேவன் விலகியுள்ளார் ஏற்கெனவே, பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேல் நாதகவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தனக்கு முக்கியத்துவம் தரவில்லை. கட்சியை பலப்படுத்துவதற்கு பதில் சீமான் பலவீனப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி தனது ஆதாரவாளர்களுடன் அவர் விலகியுள்ளார்.
Similar News
News December 7, 2025
புதுவை: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
திருமணத்தை நிறுத்திய ஸ்மிருதி மந்தனா!

தனது திருமணம் நின்றுவிட்டதாக ஸ்மிருதி மந்தனா அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தை தான் இத்துடன் முடிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார், அனைவரும் அவ்வாறே நடந்து கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இனி இந்தியாவுக்காக கிரிக்கெட்டில் மேலும் பல கோப்பைகளை வெல்ல நினைப்பதாக பதிவிட்டுள்ள அவர், இனி அதிலேயே தனது கவனம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
பணம் கொடுத்தார் ஸ்டாலின்.. அனைவரும் இத செய்யுங்க

கொடிநாளையொட்டி சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் CM ஸ்டாலின் நிதியளித்தார். இதுகுறித்து அவரது X பக்கத்தில், மக்கள் பாதுகாப்பாக வாழ உயிரைத் துச்சமாக எண்ணி காவல் காக்கும் படை வீரர்களின் பணி ஈடு இணையற்றது. தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும், அவர்களின் குடும்ப நலுனுக்கும் அனைவரும் கொடிநாள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக PM மோடியும் நிதியளித்துள்ளார்.


