News January 9, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.10.2019 முதல் 31.12.2019 வரை பதிவு செய்து தற்போது ஐந்தாண்டுகள் முடிவு பெற்றுள்ள இளைஞர்கள் நடப்பு காலாண்டிற்கு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க படிவங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News January 27, 2026

வேலூர்: அறிவியல் மையத்தில் பாலியல் சர்ச்சை!

image

வேலூர் மாவட்ட அறிவியல் மையம் பொறுப்பாளராக பணிபுரிபவர் சதீஷ் குமார். இந்த மையத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாளராக வேலை செய்து வந்த பெண்ணுக்கு சத்தீஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 27, 2026

வேலூரில் போலீசார் அதிரடி!

image

வேலூர் மாவட்டம் முழுவதும், காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஜன.26) நடத்தப்பட்ட சோதனையில் 273 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் எச்சரித்துள்ளார்.

News January 27, 2026

வேலூரில் தூக்கில் தொங்கிய வாலிபர்!

image

குடியாத்தத்தை செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் தளபதி (18). மதுபோதைக்கு அடியாக இருந்த இவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த வாலிபர், நேற்று (ஜன.26) இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!