News January 9, 2025

பைக் மீது அரசு பேருந்து மோதி மாணவர் உயிரிழப்பு 

image

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு புறநகர் பேருந்து மோதி இன்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 7, 2026

நிலக்கோட்டை கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழு கண்காட்சி!

image

திண்டுக்கல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்தும் நோக்கில் விற்பனை கண்காட்சி நடைபெற உள்ளது. நிலக்கோட்டை அரசு கலை கல்லூரியில் வரும் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், மாவட்ட மகளிர் உற்பத்தி செய்த பல்வேறு கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 7, 2026

திண்டுக்கல்லில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

image

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)

News February 7, 2026

திண்டுக்கல்: ஆதாரில் அப்டேட்.. இனி ரொம்ப ஈஸி!

image

திண்டுக்கல் மக்களே, ஆதார் கார்டு திருத்தங்களுக்கு ஆதார் மையங்களுக்கு அலையுறீங்களா? இதனால உங்கள் நேரம் வீணாகுதா? இனி அலைச்சலே இல்லை. இதுக்காகவே ‘<>Aadhaar App<<>>’ என்ற புதிய சூப்பர் செயலி வந்துருக்கு. இந்த ஒரு App போதும் நீங்களே, உங்க வீட்ல இருந்தே ஆதாரில் உள்ள செல்போன் எண் மற்றும் முகவரி விவரங்களை ஈஸியா திருத்தலாம். இதுக்கு கட்டணமா ரூ.75 மட்டும் செலுத்தினால் போதும், அலைச்சல் மிச்சம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!