News January 9, 2025
விரைவில் ஆசிரியர்கள் நியமனம்

மாநிலம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். TRB மூலம் 6,000 ஆசிரியர்களை நியமிக்க தேர்வுகள் நடந்துள்ளன. கடந்தாண்டு நவம்பரில் 3,198 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க இருந்த நிலையில், நீதிமன்ற வழங்கினால் அப்பணி தாமதம் ஆகியுள்ளது. வரும் 21ஆம் தேதி அந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்து உடன் நிரந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.
Similar News
News January 18, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பள்ளிகளுக்கு ஜன.14-18 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை மாணவர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இருப்பினும், போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே செல்வதால், நாளையும் விடுமுறை அளிக்க பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசலில் சிரமத்தை சந்திக்காமல் பயணிக்கலாம் என்கின்றனர்.
News January 18, 2026
இன்னும் எத்தனை நாளைக்கு ஜன நாயகன்? வானதி

ஜன நாயகன் பட விவகாரத்தில் விசாரணை நடந்துவரும் நிலையில், இடையில் புகுந்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் எத்தனை நாளைக்கு இப்படம் பற்றி பேசிக்கொண்டிருப்பது என்ற அவர், விஜய் கட்சி தொடங்கியிருப்பதால் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுவதாகவும், இது மாதிரி எத்தனையோ படங்கள் சென்சாரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
News January 18, 2026
தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி

3-வது ODI-ல் இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே நியூசிலாந்து பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. நியூசிலாந்து நிர்ணயித்த <<18890751>>338 ரன்கள் இலக்கை<<>> நோக்கி தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மாவும்(11), சுப்மன் கில்லும்(23) அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். ஆனால் சேஸ் மாஸ்டர் விராட் கோலி களத்தில் இருப்பதால் இந்தியா சரிவில் இருந்து மீண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி – 56/2


