News January 9, 2025
UAEஇல் வேலைவாய்ப்பு.. நீங்க ரெடியா?

Mech டிப்ளமோ, ITI படித்து அனுபவம் உள்ளவர்களுக்கு UAEஇல் தங்குமிடம், உணவுடன் வேலை உள்ளதாக தமிழ்நாடு அரசின் Overseas Manpower Corporation அறிவித்துள்ளது. வேலைகள், தகுதி, வயது வரம்பு ஆகிய விவரங்களை அறிவதற்கான இணையதளம்: www.omcmanpower.tn.gov.in தொலைபேசி எண் 044-22502267. WhatsApp எண் 9566239685. பயோ டேட்டாவை ovemclnm@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பலாம். வேலை தேடும் நண்பருக்கு இதை ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 21, 2026
கிரிக்கெட் களத்தில் கால்பதிக்கும் உசைன் போல்ட்?

8 முறை ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் உசைன் போல்ட் 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாட விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஜமைக்காவை சேர்ந்த போல்ட் அணியில் இருந்து அழைப்பு வந்தால், உடனே தயாராகிவிடுவேன் என கூறி இருக்கிறார். சிறு வயதில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என ஆசைப்பட்ட போல்ட், தற்போது உலகின் வேகமான ஓட்டப்பந்தய வீரராக உள்ளார். இப்போ அவர் எவ்வளோ ஸ்பீடில் பவுலிங் போடுவாரு?
News January 21, 2026
புளிச்சக் கீரையை இவர்கள் சாப்பிடவே கூடாது.. ALERT!

புளிச்சக் கீரையில் நிறைய நார்ச்சத்துக்கள், ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது HIGH BP, இதய பிரச்னை உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், சிலர் மட்டும் இதனை உண்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நலனை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News January 21, 2026
ஜன நாயகன் ரிலீஸ்.. காலையிலேயே ஹேப்பி நியூஸ்

‘ஜன நாயகன்’ பட சென்சார் சான்று தொடர்பான வழக்கை சென்னை HC தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. அதேநேரம், இன்று (அ) நாளை இதுதொடர்பாக தீர்ப்பு வெளியாகும் என விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த 2 நாள்களுக்குள் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அடுத்த வாரம் (அ) பிப்ரவரி 2-வது வாரத்தில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


