News January 9, 2025
கோவையில் இறைச்சிகள் விற்கக் கூடாது

கோவையில், எதிர்வரும் (15.01.2025) அன்று “திருவள்ளுவர் தினத்தை” முன்னிட்டு, அன்றைய தினம் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி சட்ட விதிகளின் படி, அபராதம், பறிமுதல் மற்றும் உரிமம் இரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (07.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 7, 2025
கோவை அருகே சோக சம்பவம்!

கோவை இடையா்பாளையம் டிவிஎஸ் நகரை சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகள் ரியா(5). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்த நிலையில் காய்ச்சலால் சில நாள்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இந்நிலையில் நேற்று முந்தினம் குளியலறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வராததால் பெற்றோர் சென்று பார்த்த போது, தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 7, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.08) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, எம்ஜி சாலை, ஒண்டிப்புதூர், துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், மன்னம்பாளையம், வலசுபாளையம் அய்யப்பநாயக்கன்பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


