News January 9, 2025
TNPSC குரூப் 2, 2A இலவச பயிற்சி விண்ணப்பிப்பது எப்படி?

குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. இதில் இணைய விரும்புபவர்கள் மெயின்ஸ் தேர்வுக்கு விண்ணப்பித்த படிவத்தின் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் போட்டோவுடன் சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வேலை நாள்களில் நேரடியாக அணுகலாம். மேலும் விவரங்களுக்கு decgc.coachingclass@gmail.com என்ற E-Mailஇல் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 8, 2025
IUML தவெகவில் இணைய திட்டமா?

திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தலுக்கு 5 சீட்கள் கேட்டிருக்கிறது. ஆனால் ஆளும் தரப்பு, கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு மொத்தமாகவே 4 சீட்கள்தான் ஒதுக்கவேண்டும் என்ற முடிவில் இருக்கிறதாம். ஒருவேளை கேட்பதை கொடுக்காத பட்சத்தில் IUML தவெகவில் இணையலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பான Official தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News December 8, 2025
தாய்லாந்து-கம்போடியா மோதல்: மீண்டும் போர் பதற்றம்!

கடந்த அக்டோபர் மாதம் தான், டிரம்ப் முன்னிலையில் <<17232581>>தாய்லாந்து-கம்போடியா<<>> போர் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், 2 மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில், இன்று எல்லையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தங்கள் ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக கூறி, கம்போடியாவின் ராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதை கம்போடியா மறுத்துள்ள நிலையில், மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.
News December 8, 2025
விஜய் பரப்புரைக்கு TN-ல் இருந்து யாரும் வராதீங்க: TVK

புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ள விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு TN-ல் இருந்து யாரும் வர வேண்டாம் என புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். உப்பளத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளன. இதனால், கடலூர், விழுப்புரத்திலிருந்து கூட்டம் வரும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


