News January 9, 2025
திருப்பதியில் உயிரிழந்தவர்களுக்கு நெல்லை முபாரக் இரங்கல்

எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்ட அறிக்கையில் திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன சீட்டு வாங்குவதற்கு வரிசையில் நின்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Similar News
News February 1, 2026
நெல்லையில் வழிப்பறி ஆசாமி கைது

நெல்லை பேட்டையை சேர்ந்த சங்கர நாராயணன் (38) என்பவர் வழுக்கு ஓடை பாலம் அருகே நடந்து சென்றபோது டவுன் பழனிதெருவை சேர்ந்த சபரி (22) என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறிக்க முயன்றார். இது குறித்து சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட டவுன் போலீசார் வழக்கு பதிவு சபரியை இன்று கைது செய்தனர்.
News February 1, 2026
நெல்லை: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

திருநெல்வேலி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News February 1, 2026
நெல்லை: ஒரே இடத்தில் 488 மது பாட்டில் பதுக்கல்

கங்கைகொண்டான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா தலைமையில் போலீசார் நேற்று (ஜனவரி 31) இரவு ஆலடிப்பட்டி பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மணி (63) என்பவரை பிடித்து விசாரித்தனர். மேலும், அவர் பதுக்கி வைத்திருந்த 488 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.


