News January 9, 2025

நரசிம்மர் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

image

கீழப்பாவூரில் 16 திருக்கரங்களுடன் அமைந்துள்ள அபூர்வ ஸ்ரீநிதியும் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை (ஜன.10) நடைபெறவுள்ளது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. மாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறந்து பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 1008 அகல்விளக்கு பூஜை ஏற்றப்படுகிறது.

Similar News

News September 30, 2025

தென்காசி: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

தென்காசி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 30, 2025

தென்காசி: ரோட்டில் அடிபட்டு கிடந்த மான்

image

தென்காசி, சுரண்டையில் இருந்து சாம்பவர்வடகரை செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடிபட்ட நிலையில் கிடந்த மானை அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த வனத்துறையினர் சாலையில் அடிபட்டு கிடந்த மானிற்கு முதலுதவி அளித்து அதனை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விட்டனர்.

News September 30, 2025

தென்காசி: தனியார் பள்ளிகளில் அதிக வசூலா??

image

தென்காசி மக்களே, நாளை விஜயதசமி உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் முன், தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு விதிக்கபட்ட கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கும் மேலாக வசூலித்தால், 044-28251688 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தென்காசி தனியார் பள்ளி கட்டணம் முழுப் பட்டியலுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!