News January 9, 2025

பொங்கல் பரிசுத்தொகுப்பு- தொலைபேசி எண்கள் அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட்டு வரும் பணி குறித்த கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0427-2415784, 0427-2451943, 73387-21707 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 9, 2025

சேலம்: கனரா வங்கி நிறுவனத்தில் வேலை!

image

சேலம்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிந்துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிடீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>>. அக்.6ஆம் தேதியே இதற்கு கடைசி நாள். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

சேலத்தில் அறிவித்தார் கலெக்டர்!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் , தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சுயதொழில் துவங்க இ-சேவை மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. தொழில் முனைவோர் திட்டம் மற்றும் நன்னிலம் மகளிர் நில திட்டம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து இதில் பயன் பெறலாம் என வலியுறுத்தியுள்ளார்.

News September 9, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் சிறப்பு ரயில் (03680) இன்று (செப்.09) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் சுமார் 08.25 மணி நேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

error: Content is protected !!