News January 9, 2025

ஆதாய கொலை 83% குறைவு; டிஐஜி தகவல்

image

நெல்லை காவல் சரகத்தில் சாதிய கொலைகள், ரவுடி கொலைகள், வரதட்சணை மரணங்கள் எதுவும் 2024ல் நடைபெறவில்லை. இங்கு 83 சதவீதம் ஆதாய கொலைகள் 2024 ஆம் ஆண்டு குறைந்துள்ளது. சரகத்தின் நான்கு மாவட்டங்களில் உள்ள 268 கல்லூரிகளிலும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என நெல்லை காவல் சரக துணைத் தலைவர் மூர்த்தி இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News February 13, 2026

மாவட்டத்தில் இரவு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப்.13) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News February 13, 2026

மாநகரில் இரவு காவல் உதவிக்கு பணி அதிகாரிகள் விபரம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப்ரவரி 13ம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News February 13, 2026

நெல்லை இளைஞரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண்கள்

image

நெல்லையை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரிடம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி, சரோஜினி ஆகிய இருவரும் அரசின் சுகாதார துறையில் அஜித்குமாருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.8,00,000 பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளனர். அஜித்குமார் அளித்த புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரோஜினி, ராஜலட்சுமி ஆகிய இருவரையும் இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!