News January 9, 2025
வங்கிக் கணக்கில் இன்றே ₹1000 வரவு

ஜனவரி மாதத்திற்கான ‘மகளிர் உரிமைத் தொகை’ ₹1000 இன்றே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் 14ஆம் தேதி செலுத்தப்படும் இந்தத் தொகையானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னதாகவே வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், இன்றே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன. உங்கள் வங்கிக் கணக்கில் ₹1000 வந்துள்ளதா? கமெண்ட்ல சொல்லுங்க..
Similar News
News January 17, 2026
SPONSOR-களைத் தேடுவது ஏன்? அஜித்தின் விளக்கம்

நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்குப் பின் விளம்பரம் ஒன்றில் நடித்தது பேசுபொருளானது. இதனிடையே SPONSOR-களை தேடுவது குறித்த அவரது பேட்டி வைரலாகியுள்ளது. அதில் சொத்து சேர்க்க SPONSORகளை தேடவில்லை என்றும், ரேஸ் டிரைவர்கள், கார் உற்பத்தி நிறுவனங்கள் எனப் பலரின் நன்மைகளை கருத்தில்கொண்டு SPONSOR-க்காக பல கதவுகளை தட்டி வருவதாக விளக்கமளித்துள்ளார்.
News January 17, 2026
திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா?

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பள்ளிகளுக்கு ஜன.14 – 18 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் படுகுஷியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக திங்கள்கிழமை அன்றும் விடுமுறை அளிக்க பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை ஏற்படும் கூட்ட நெரிசலில் சிரமத்தை சந்திக்காமல் இருக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
News January 17, 2026
பலாத்காரத்துக்கு காரணம் அழகு தான்: காங்., MLA

ஒரு அழகான பெண் சாலையில் நடந்து செல்வதை பார்த்தால் எந்த ஆணும் சலனப்படத்தான் செய்வான். அதுதான் பலாத்காரத்துக்கு காரணம் என மத்திய பிரதேச காங்., MLA பூல்சிங் பரையா கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. மேலும் SC, ST வகுப்பைச் சேர்ந்த பெண்கள் அழகற்றவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராகுல்காந்திக்கு அம்மாநில CM மோகன் வலியுறுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


