News January 9, 2025
சிவகங்கையில் 2024ஆம் ஆண்டில் 1,154 சாலை விபத்துகள்

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவுகள், அதிவேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளால் தினந்தோறும் விபத்துகள் நடக்கின்றன.இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த 1,154 விபத்துகளில் 358 பேர் உயிரிழந்துள்ளனர். 791பேர் காயமடைந்துள்ளனர். டூவீலர் விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களில் 90% பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர் என கூறப்படுகின்றது.
Similar News
News December 9, 2025
சிவகங்கை: நாதக வேட்பாளர் புகார்; ஆட்சியர் விளக்கம்

சிவகங்கையில் நாதக வேட்பாளர் மற்றும் அவரது கணவர் பெயர் SIR-ல், இறந்தவர்கள் பட்டியலில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் உடனடியாக சரி செய்யப்படும் என சிவகங்கை ஆட்சியர் விளக்கம் தெரிவித்துள்ளார். Check list என்பது இப்பணியில் உள்ள குறைகளை களைவதற்காக வழங்கப்பட்ட விவரங்கள்தான். இது இறுதிப்பட்டியல் அல்ல என அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் வாக்காளர்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் நிறுத்தம்

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளைய தினம் செவ்வாய்கிழமை (9.12.2025) மற்றும் புதன்கிழமை(10.12.2025) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, இன்று தெரிவித்துள்ளார்