News January 9, 2025
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு சில ஆம்னி பேருந்துகளில் ரூ.4,000 கட்டணம் வசூலிக்கப்படுவடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கட்டண கொள்ளையை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News February 11, 2026
சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார். வியாசர்பாடி குற்றப்பிரிவுக்கு தாஹிராவும், கோட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு லில்லியும் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சந்திரசேகரன் எம்.கே.பி.நகருக்கும், காளிராஜ் ஆர்.கே.நக ருக்கும், லதா மகேஸ்வரி ஐகோர்ட்டுக்கும், பாஸ்கர் கோட் டூர்புரத்துக்கு என 13 இன்ஸ்பெக்டர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
News February 11, 2026
சென்னை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News February 11, 2026
சென்னை: கேக்கில் விஷம் கலந்து குடும்பத்திற்கே தந்த கொடூரம்

சென்னை பெரம்பூரை சேர்ந்த சகாயம் செபஸ்டின் என்பவது மனைவி பியூலா புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மன வேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து மனைவி, மகன், மகளுக்கு கொடுத்து தானும் உண்டுள்ளார். இதனால் சகாயம் செபஸ்டின், அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மனைவி, மகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*.


