News January 9, 2025
தொழிலாளிக்கு 19 ஆண்டுகள் சிறை: திருவாரூர் கோர்ட் தீர்ப்பு

திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (42). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்டாலினை கஜேந்திரன் அரிவாளால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்தார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த திருவாரூர் நீதிமன்றம் கஜேந்திரனுக்கு 19 ஆண்டுகள் சிறை, ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
Similar News
News December 9, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகிற 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (டிச.08) இரவு 10 மணி முதல் இன்று (டிச.09) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News December 8, 2025
திருவாரூர் மத்திய ப.கழகத்தில் 22 புதிய படிப்புகள்

தேசிய கல்வி கொள்கை வழிகாட்டுதல் படி வருகின்ற கல்வியாண்டில் 22 புதிய இளநிலை பட்டப் படிப்புகள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த படிப்புகளில் சேர மத்திய பல்கலைக்கழகங்களுக்கான சேர்க்கை நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்றும் இந்த தேர்வு தமிழில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


