News January 9, 2025
அவதூறு பரப்பிய 103 பேர் கைது – எஸ்பி தகவல்

நெல்லை மாவட்ட சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையிலும் அவதூறு கருத்துக்களை பரப்பிய கடந்த இரு ஆண்டுகளில் 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தாமரை கண்தன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News November 16, 2025
நெல்லை: மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!

நெல்லை மக்களே, வடகிழக்கு பருவமழை கராணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (நவ 17) தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 16, 2025
நெல்லை: பட்டாவில் பெயர் மாற்றனுமா? இத பண்ணூங்க

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


