News January 9, 2025
பொங்கல் தொகுப்பு இன்று முதல் விநியோகம்

பொங்கல் தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படவுள்ளது. ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீளக் கரும்பு ஆகியன பரிசுத் தொகுப்பாக வழங்கப்படவுள்ளன. பொங்கல் தொகுப்பை ஜன. 13ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க ரேஷன் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
புதுக்கோட்டை: மது விற்ற இரண்டு பேர் கைது!

விராலிமலை பேருந்து நிலையம் அருகே அனுமதி இன்றி மது விற்கப்படுவதாக விராலிமலை காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவல் எடுத்து அப்பகுதியில் சென்று கண்காணிக்க பணியில் ஈடுபட்ட போது டாஸ்மார்க் அருகே மணமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52), மாதிரிபட்டி டாஸ்மார்க் கடை அருகே மதுவிற்ற திருநல்லூர் ராமலிங்கம் (31) ஆகிய இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 106 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
News January 17, 2026
திமுகவின் கோட்டையை குறிவைக்கும் பாஜக?

மறைந்த Ex CM கருணாநிதி முதன்முதலாக(1957) போட்டியிட்டு வென்ற தொகுதி குளித்தலை. அதன்பிறகு அது அதிமுகவின் கோட்டையாக மாறியது. ஆனால் 2016-ல் இருந்து அங்கு மீண்டும் தலைதூக்கியிருக்கிறது திமுக. இதனால், இம்முறை குளித்தலையில் திமுகவை தோற்கடித்தால் இமேஜ் கூடும் என்று நினைக்கிறதாம் பாஜக தலைமை. அத்தொகுதியை EPS-யிடம் கேட்க, அவரும் அதற்கு ஓகே சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
News January 17, 2026
PKV பிரபு திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

டெல்டா மாவட்டங்களில் அதிமுக முக்கிய முகங்களில் ஒருவராக வலம் வந்த வேதாரண்யம் PKV பிரபு உதயநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரது தாத்தா வெங்கடாசலம் காங்கிரஸில் EX MLA, மாநில துணை தலைவராக இருந்தவர். திமுகவில் இணைந்த பிரபு, அதிமுக(OPS அணி) மாநில அமைப்புச் செயலாளராக இருந்தவர். மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் என அடுத்தடுத்து தனது ஆதரவாளர்கள் திமுகவில் இணைவது OPS-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


