News January 9, 2025
இக்கட்டான சூழலில் துணை நிற்போம்: ராகுல்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News January 25, 2026
விஜய்யுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் இணைந்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், சற்றுமுன் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக இரண்டாக பிளவுபட்ட பிறகு, OPS-ன் தீவிர ஆதரவாளராக இருந்தவர் இவர். சமீபகாலமாக OPS அணியினர் அடுத்தடுத்து வெளியேறி மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் இன்று விஜய் முன்னிலையில் கு.ப.கிருஷ்ணன் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். 1991 – 1996 வரை விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர்.
News January 25, 2026
பத்மஸ்ரீ விருதுகள் பெறும் தமிழர்கள்!

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த கால்நடை ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஓதுவார் திருத்தணி சாமிநாதன், நீலகிரியைச் சேர்ந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணா, வெண்கல சிற்பக் கலைஞர் கலியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவச்சலம் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.
News January 25, 2026
விஜய்யின் இன்றைய குட்டி ஸ்டோரி இதுதான்

சொந்த நாட்டிலே நெருக்கடியின்போது, மறைந்து வாழ்ந்து வந்தார் ஒருவர். பின்னர், தனது நட்புறவுடன் பேசி பெரும் படையை திரட்டி நாட்டையே மீட்டெடுத்தார் அவர். அவர்தான் நம் (தவெக) கொள்கைத் தலைவர் வேலுநாச்சியார். இந்த போரின்போது நட்பு சக்தியாக இருந்த மருது சகோதரர்கள் போல் நீங்கள் (தொண்டர்கள்) ஒற்றுமையுடன் செயல்பட்டு, ஊழல்படிந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என ரியல் கதையை கூறினார் விஜய்.


