News January 9, 2025
கோலி எனக்கு கடவுள்: கான்ஸ்டாஸ்

BGT தொடரில் விராட், பும்ராவிடம் வம்பிழுத்து கவனம் பெற்ற இளம் ஆஸி. வீரர் கான்ஸ்டஸ், கோலி தனக்கு கடவுள் மாதிரி என தெரிவித்துள்ளார். கோலியின் ஆட்டத்தை பார்த்து தான் வளர்ந்ததாகவும், போட்டி முடிந்த பிறகு அவரிடம், உங்களது மிகப்பெரிய ஃபேன் என பேசியதாகவும் கான்ஸ்டாஸ் கூறியுள்ளார். விராட் மரியாதையுடன் பேசக்கூடிய சிறந்த மனிதர் எனவும், நன்றாக விளையாட தன்னை வாழ்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 15, 2026
JUST IN விருதுநகருக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்

அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி பகுதியில் தி.மு.க. தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு இன்னும் சரியான தேதி குறிப்பிடாத நிலையில் நாளை(ஜன.16) பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பின்னர் இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏற்பாடுகளை காலை 11 மணியளவில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 15, 2026
தேர்தல் நோக்கத்தோடு விஜய் இதை சொல்கிறார்: தமிழிசை

தேர்தல் நெருங்குவதால் தை மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை சொன்னாரா விஜய் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என விஜய் <<18861926>>பதிவிட்டதை<<>> குறிப்பிட்ட அவர், சித்திரை மாதம் தான் தமிழ்ப் புத்தாண்டு என்றார். மேலும், விஜய்தான் தவறாக எண்ணி கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
ஈரானில் 3,428 பேர் பலி.. நாடே துக்கத்தில் ஆழ்ந்தது

உலகெங்கும் பல இடங்களில் நடைபெற்று வரும் போரால் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ஈரானை நிலைகுலையச் செய்துவரும் உள்நாட்டு போரில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 3,428 ஆக உயர்ந்துள்ளது. அரசுக்கு எதிரான போரில் ஜென் Z தலைமுறையினரின் தீவிர போராட்டத்தில் பொதுமக்களும் சிக்கி உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஈரான் மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


