News January 9, 2025

டங்ஸ்டன் விவகாரத்திற்கு அதிமுக தான் காரணம்: அமைச்சர்

image

டங்ஸ்டன் உள்ளிட்ட கனிம சுரங்கங்களை ஒன்றிய அரசே ஏலம் விடலாம் என்ற சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்தது அதிமுக தான். இது தான் இந்த பிரச்னையின் மூலம். இன்றைக்கு அரசியல் ஆதாயத்திற்காக இப்பிரச்னையில் குளிர்காய நினைக்கிறீர்கள்” என பேரவையில் நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக பேசி உள்ளது மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 26, 2026

மதுரை : சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

மதுரை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <>க்ளிக்<<>> செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

News January 26, 2026

மதுரை: லாரி மோதி டூவீலரில் சென்ற இளைஞர் பலி

image

சமயநல்லூர் பாத்திமாநகரை சேர்ந்தவர் பாண்டி மகன் முருகவேல் (28). இவர் தனது டூவீலரில் சமயநல்லூரில் இருந்து தேனூர் சாலையில் நேற்று முன்தினம் சென்ற போது, சுல்தான் மரக்கடை எதிரே பின்னால் வந்த லாரி மோதியது. பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று பலியானார். சமயநல்லூர் போலீசார் சோழவந்தனை சேர்ந்த லாரி டிரைவர் கணேசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News January 26, 2026

மதுரையில் பைக்கில் சென்ற கட்சி நிர்வாகி பலி

image

மதுரை மாவட்டம் சேடப்பட்டியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ராமசாமி (48), அத்திப்பட்டியில் விசேஷம் முடிந்து மொபெட்டில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சேடப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பின்னால் வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த சாமிநாதனிடம் (53) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!