News March 25, 2024
CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி

மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர CUET எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேர்வு மே 15 – 31வரை நடைபெற உள்ளதாக பல்கலை., மானியக்குழு தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு exams.nta.ac.in என்ற இணையதளத்தை காணலாம்.
Similar News
News November 5, 2025
அதிமுகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?

தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட 250 பக்க கடிதத்தில் பல முக்கிய விஷயங்கள் இருக்கின்றன; அதை பொதுவெளியில் சொல்ல முடியாது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவில் இருந்து தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக புதிய தகவலை வெளியிட்ட அவர் , தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்; நல்லதே நடக்கும் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
Whatsapp கொடுக்கும் சூப்பர் அப்டேட்!

தனது பயனர்களை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள, Whatsapp அடுத்தடுத்த அதிரடி அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில்தான், தற்போது Username வசதியை Whatsapp உருவாக்கிக் வருகிறது. இதன் மூலம், Whatsapp-ல் இனி Voice/ Video Call-கள், Message-களை போன் நம்பரை பகிராமலே செய்யலாம் என கூறப்படுகிறது. Beta பரிசோதனையில் இருக்கும் இந்த வசதி, கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
News November 5, 2025
கோப்பையை டாட்டூ குத்திய கேப்டன்!

40 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்த உலகக்கோப்பை கனவை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி நிறைவேற்றியது. இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், சரித்திரம் படைத்த அணிக்கு கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர், மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வருகிறார். மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்துள்ள அவர், உலகக்கோப்பையை தனது கையில் டாட்டூ குத்தியுள்ளார்.


