News January 8, 2025

பொங்கல் கரும்பை ஆய்வு செய்த ஆட்சியர்

image

தை திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக பொங்கல் தொகுப்பில் கரும்பும் வழங்கப்பட இருப்பதால், அரசர் குளம் பகுதியில் அரசால் வாங்கப்பட்ட செங்கரும்பு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியர் அருணா இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News

News August 27, 2025

திருமயம் அருகே கார் மோதி ஒப்பந்த தொழிலாளர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா பூங்குடியைச் சேர்ந்தவர் குமாரராஜா(31). இவர் திருமயம் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பட்டினம் அருகே பைக்கில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவர் சூரியா(31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 27, 2025

புதுக்கோட்டை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>>, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

புதுக்கோட்டை: விநாயகர் சதுர்த்தியில் இத பண்ணுங்க..

image

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!