News January 8, 2025
8-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

ஆண்டிபட்டி, டி. சுப்புலாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள், உரிமையாளர்களுக்கும் இடையே போடப்பட்ட 02 ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிச. 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் உரிமையாளர்கள் புதிய ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. 50% கூலி உயர்வு, 20% போனஸ் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட வலியுறுத்தி தொடர் 8 நாட்களாய் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 14, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 13.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News February 13, 2026
தேனி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News February 13, 2026
தேனி: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

தேனி மக்களே, இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க


