News January 8, 2025
கல்வராயன் மலை விவகாரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை தமிழக அரசு நிரப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News February 7, 2026
மாவட்ட ஆட்சியரிடம் விசிக சார்பில் மனு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்தை, இன்று மாவட்ட விசிக நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு வரவேற்பு அளிப்பதாகவும், அதே சமயம் கள்ளக்குறிச்சியில் உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
News February 7, 2026
கள்ளக்குறிச்சி: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 7, 2026
கள்ளக்குறிச்சி: CERTIFICATES வாங்க HI போடுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


