News January 8, 2025
கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி தலைமையில் இன்று (08.01.2025) நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 31, 2026
கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கள்ளக்குறிச்சி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 31, 2026
கள்ளக்குறிச்சி: ஒரே கேள்வி; உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி

உப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (17) 7ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். வீட்டு வேலை செய்யவில்லை என அவரது அம்மா ராஜகிளி திட்டியதால் கடந்த 18-ம் தேதி மகேஸ்வரி கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 31, 2026
கள்ளக்குறிச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


